மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் மரண வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் விசாரணை திருப்திகரமாக உள்ளதாக, அஜித்குமாரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வருகின்றனர்.
அஜித்குமார் தாக்கப்பட்ட இடம், கோசாலை, கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் வந்து விசாரணை மேற்கொண்டது திருப்தி அளிப்பதாகத் தெரிவித்தார்.