திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
துவரங்குறிச்சி பகுதியில் ராஜா என்பவருக்குச் சொந்தமான ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டையில் திடீரென தீ பற்றியது.
தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளித்தது. தொடர்ந்து தகவல் அறிந்து வந்த துவரங்குறிச்சி மற்றும் மணப்பாறையைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர், வெகுநேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.