சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எதிரே உள்ள தெருவில் மர்ம நபர்கள் கடப்பாரையுடன் சென்று வீட்டின் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள வைக்கோல் தொட்டி தெருக்கு நள்ளிரவு வந்த இரு மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த கடப்பாரையால் அங்குள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது சிசிடிவி அலாரம் ஒலித்த நிலையில், இருவரும் அங்கிருந்து சகவாசமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.