விருதுநகரில் மர்ம நபர்கள் வீடு புகுந்து இளைஞரைக் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லம்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து, மினரல் வாட்டர் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இவர் வழக்கம்போல் பணி முடிந்து தனது வீட்டிற்குள் உணவருந்திக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த இரு மர்ம நபர்கள் மாரிமுத்துவை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.