சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கான “டோலி சாய்வாலா பான் இந்தியா” டீ கடை ஃபிரான்சைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சாதாரண டீக்கடைக்காரர் தற்போது இந்திய நட்சத்திரமானது எப்படி என்பதைப் பார்க்கலாம் விரிவாக..
டிரெண்டிங் Dolly Chaiwala-விடம் பில்கேட்ஸ் தேநீர் அருந்திய பின்தான் இணையதளத்தில் நட்சத்திரமாக உயர்ந்தார் சுனில் பாட்டீல். டோலி சாய்வாலா என அறியப்படும் இந்த சாதாரண டீக்கடைக்காரர் சுனில் பாட்டீல் நாக்பூரைச் சேர்ந்தவர். தனித்துவமான டீ பரிமாறும் பாணியால் சமூக வலைத்தளங்களில் டிரெண்டானவர்.
தற்போது தனது “டோலி கி டப்ரி” பிராண்டை ஃபிரான்சைஸாக இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் சுனில் பாட்டீல்.
சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த இவர், இது இந்தியாவின் முதல் வைரல் ஸ்டீரிட் பிராண்ட் என குறிப்பிட்டுள்ளார். தள்ளுவண்டி முதல் ஃபிளாக்ஷிக் கபேக்கள் வரை நாடு முழுவதும் தொடங்குவதாகக் கூறிய அவர் விண்ணப்பங்களையும் வரவேற்று பதிவிட்டிருந்தார்.
அதன்படி தள்ளுவண்டிக் கடை என்றால், 4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் ரூபாய் வரையிலும், கடை என்றால் 20 லட்சம் முதல் 22 லட்சம் ரூபாய் வரையிலும், ஃபிளாக்ஷிப் கஃபே: என்றால் 39 லட்சம் முதல் 43 லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு வைரலான நிலையில் 1609 பேர் ஃபிரான்சைஸ் எடுக்க முன்வந்துள்ளனர். இதனை வரவேற்றுப் பதிவிட்டுள்ள டோலி சாய்வாலா, பெரும்பாலானவர்களைப் போல் பள்ளி செல்ல தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் வெயிலோ, மழையோ, நல்லதோ, கெட்டதோ எதையும் பொருட்படுத்தாமல் தமது தேநீர் கடையின் பின்புலமாகக் கடந்த 20 ஆண்டுகளான இருக்கிறேன் என்றும், தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கைவிடவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
இன்று நான் அதிர்ஷ்டமானதாகத் தெரிகிறேன், அதைவிடவும் கர்வம் கொள்கிறேன் என்றும் பதிவிட்டிருக்கிறார் இந்த சாய்வாலா.
டோலி சாய்வாலாவின் அறிவிப்பிற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக மாறுபவர்களை வர்த்தகமயமாக்கி வருவது கவலையளிப்பதாகப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.