இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பரபரப்பான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா 387 ரன்கள் எடுத்தன.
2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 193 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது.
4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நாளில் வெற்றிக்கு குறைந்த ரன்களே தேவைப்பட்ட நிலையில், இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய அணி திணறியது.
ஒரு முனையில் ஜடேஜா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், மறுமுனையில் இந்திய வீரர்கள் நடையை கட்டினர்.
இறுதியாக இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் கடைசிவரை போராடிய ஜடோஜா 61 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.