பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி, நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கண்டு ரசித்தார்.
1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சி மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு வந்தது. மக்களாட்சியை நிறுவிய இந்த தினம் பிரான்ஸ் நாட்டுத் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இன்று பாரிஸ் நகரில் தேசிய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஏற்றுக் கொண்டார்.
மேலும், அந்நாட்டு விமானப்படை பல்வேறு வான் சாகச நிகழ்ச்சியை நிகழ்த்தி அசத்தியது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.