கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
முதற்கட்டமாக நிபா வைரஸ் பாதித்து இறந்த நபரின் வீட்டை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் இறந்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.