ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
ராஜஸ்தானின் ஹிசாரிலிருந்து திருப்பதி செல்லும் ஹிசார் எக்ஸ்பிரஸ், திருப்பதி ரயில் நிலையத்தில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.