இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
லண்டனில் இருந்து புறப்பட்ட ஜீஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து, சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த கோர விபத்தில், விமானத்திலிருந்த 4 பேரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டின் விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.