அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில் கைதான காவலர்கள் 5 பேரின் நீதிமன்ற காவல், வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன், கண்ணன், ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
காவல் நிறைவடைந்ததை அடுத்து 5 பேரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம், நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் நீதிமன்ற காவல் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.