அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ DSP மோஹித்குமார் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
2-வது நாள் விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் திருப்புவனம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமாரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிஐ DSP மோஹித்குமார் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தார்.
அப்போது வழக்கு விசாரணைக்கான வசதிகள் செய்து தருவது குறித்து ஆட்சியருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.