செயல்படாத முதலமைச்சரின் திடீர் ஞானோதயம்தான் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
அவிநாசியில் இது தொடர்பாக பேசியவர்,
செயல்படாத முதலமைச்சரின் திடீர் ஞானோதயம்தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்றும் நிர்வாகத் திறமையின்மையை மறைக்கவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
முழுமையாகச் செயலிழந்த ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்றும் ‘SORRY மா’ என்பது ஒரு முதலமைச்சர் கூறக்கூடிய வார்த்தையா? என்று எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.
“விலைவாசி, சொத்து, பத்திரப்பதிவு என மக்கள் மீது வரிச் சுமையை உயர்த்தியுள்ளனர் என்று குற்றம்சாட்டியவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 2026 தேர்தலில் மிகப்பெரும் தோல்வி காத்துக்கொண்டிருக்கிறது என்றும் தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற பல்வேறு யுக்திகள் கையாளப்படுகிறது என்று எல்.முருகன் குற்றம்சாட்டினார்.