மதுரை அருகே ஐடிஐ மாணவர் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளமனூர் கண்மாய் கரையில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து, பாதி எரிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் உடலொன்று கிடந்தது.
போலீசாரின் விசாரணையில், உயிரிழந்தவர் ஒத்தக்கடை சுதந்திரா நகரைச் சேர்ந்த ஐடிஐ மாணவரான பிரசன்னா என்பது தெரியவந்தது.
சம்பவத்தன்று பிரசன்னாவுடன் கண்மாய்க்குச் சென்ற மூவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரசன்னாவை கொலை செய்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் மறியலைக் கைவிட்டனர்.