தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் பேரூராட்சி அலுவலகத்துக்கு கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி பேரூராட்சியின் தலைவராக திமுகவைச் சேர்ந்த பொன் சந்திரகலா என்பவர் பதவி வகித்து வருகிறார்.
இவர் முறையான வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும், பொன் சந்திரகலா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக்கோரி கடிதமும் அளித்திருந்தனர்.
இந்நிலையில், ராஜினாமா கடிதத்துடன் கவுன்சிலர்கள் வந்த நிலையில், அவர்களுடன் பேரூராட்சி செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார்.