கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க இடைக்காலத் தடை விதித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி ஏரிக்குச் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாகத் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
மழை வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியைப் பாதுகாக்கும் வகையில், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதான நிலத்தில் ஏன் ஏரி அமைக்கக்கூடாது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து, தலைமைச் செயலாளரிடம் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது எனத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.