திருப்பூர் மாவட்டம், நெருப்பெரிச்சல் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாநகராட்சிக்குப் பூச்செடி கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சியின் 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் சுமார் 800 டன் குப்பைகள், நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள செயல்படாத பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகின்றது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் குப்பைகளைக் கொட்டி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக மாநகராட்சியைக் கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.