கிருஷ்ணகிரி மாவட்டம் சக்கிலிநந்தத்தில் சிகிச்சை பெறச் சென்ற சிறுவனின் பெற்றோரை மருத்துவர் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக்கிலிநந்தத்தை சேர்ந்த விஜயன் என்பவரது மகனுக்கு இருசக்கர வாகனம் மோதி தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது பெற்றோர் சிறுவனை அதே ஊரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த மருத்துவரான வடிவேல் என்பவர், சிறுவனுக்கு சிகிச்சையளிக்காமல் செல்போனை நோண்டியடி இருந்துள்ளார்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய சிறுவனின் பெற்றோரை அவமரியாதையாகப் பேசியதுடன், தாக்குதலும் நடத்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.