ஈரோட்டில் தம்பதிக்கு முகநூல் மூலம் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு முகநூல் மூலம் மர்ம நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தம்பதி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சம்மந்தப்பட்ட முகநூல் ஐ.டி-ஐ வைத்து விசாரணை நடத்தியதில், கந்தசாமிபாளையத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் இச்செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.