வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத கோட்டக்குப்பம் டிஎஸ்பி-யை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போடி டிஎஸ்பியாக உள்ள சுனில், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் டிஎஸ்பியாக இருந்தபோது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்காத மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளைப் பின்பற்றாத காவல் துணை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.