டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஜானிக் சின்னர் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த நிலையில், சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், ஆண்கள் பிரிவில் ஜானிக் சின்னர் மாற்றமின்றி முதலிடத்தில் தொடர்கிறார். மேலும், அல்காரஸ் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் அரினா சபலென்காவும், 2-வது இடத்தில் அமெரிக்காவின் கோகோ காப்பும் மாற்றமின்றி தொடர்கிறார்கள்.
விம்பிள்டன் பட்டத்தை வசப்படுத்திய ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.