மறைந்த நடிகை சரோஜா தேவியின் உடல் 24 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் வசித்து வந்த சரோஜா தேவி, உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
தொடர்ந்து அவரது உடலுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சொந்த ஊரான தஷாவரா கிராமத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து கொடிஹள்ளி தோட்டத்தில் 24 குண்டுகள் முழங்க சரோஜா தேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.