அஜித்குமார் குடும்பத்தை மிரட்டினாரா டிஎஸ்பி? - பகீர் கிளப்பும் புதிய வீடியோ!
Jul 31, 2026, 05:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அஜித்குமார் குடும்பத்தை மிரட்டினாரா டிஎஸ்பி? – பகீர் கிளப்பும் புதிய வீடியோ!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை காவலர்களால் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட  சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கு சிபிஐ வசம் சென்ற நிலையில், அஜித்குமாரின் குடும்பத்தினரிடம்  மானாமதுரை டிஎஸ்பி ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ  வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மடப்புரம் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீசார் கொடூரமாகத் தாக்கிய காட்சிகள்தான் இவை…. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த ஜூன் 28ம் தேதி திருட்டுப் புகாரில் சட்டவிரோதமாகக் காவலில் எடுத்த தனிப்படை, அவரை சித்ரவதை செய்து அடித்தே கொன்றது.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளின் தலையீடு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அஜித்குமார் கொலை வழக்கு பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளானது.

நெருக்கடி அதிகரித்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கை வேறு வழியின்றி சிபிஐ-க்கு மாற்றியது தமிழக அரசு. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், அஜித்குமார் தாக்கப்பட்ட இடம், கோசாலை, கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் அவர்கள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் வந்து விசாரணை மேற்கொண்டது திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அஜித்குமார் லாக்-அப் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 28ம் தேதி அஜித்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போராட்டங்கள் நடத்தி இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம், உங்களுக்கு வேண்டியதைச் செய்கிறோம், பணம் தருகிறோம் என ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார் டிஎஸ்பி. மண்டபத்தை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதை அப்பகுதி மக்கள் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த நிலையில், அந்த காட்சிகள் தற்போது வெளியாகிப் பரபரப்பைக் கூட்டியுள்ளன.

இந்த வீடியோ காட்சிகள் சிபிஐ விசாரணைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமார் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.

Tags: cbiDid DSP threaten Ajith Kumar's family? - New video from Baaghi Clubஅஜித்குமார் குடும்பத்தை மிரட்டினாரா டிஎஸ்பி?மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார்
ShareTweetSendShare
Previous Post

முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட சரோஜா தேவியின் உடல்!

Next Post

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies