2 ஆண்டுகளாக வழங்கப்படாத பங்களிப்பு ஓய்வூதிய தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை எழிலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வு பெற்ற வருவாய்த் துறை கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டிய பங்களிப்பு ஓய்வூதிய தொகையை வழங்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில், சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பங்களிப்பு ஓய்வூதிய தொகையை 2 ஆண்டுகளாக வழங்காமல் அரசு இழுத்தடிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர்கள், தொகையை விரைவில் வழங்காவிட்டால் அடுத்தக் கட்ட போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.