விஷ பாம்புகளின் தாயகம் : நடுநடுங்க வைக்கும் பூமியின் கொடிய தீவு!
Sep 2, 2026, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

விஷ பாம்புகளின் தாயகம் : நடுநடுங்க வைக்கும் பூமியின் கொடிய தீவு!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 05:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூமியிலேயே மிகவும் ஆபத்தான கொடிய தீவு ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. மனிதர்களே இல்லாத அந்தத் தீவுக்குச் செல்ல கடற்படையின கூட நடுநடுங்கிப் போவார்கள்.. அப்படி என்ன தீவு பார்க்கலாம் விரிவாக..

பிரேசிலின் சா பாவ்லோ நகரின தென்மேற்கு பகுதியில் உள்ள இந்த தீவுதான் உலகின் மிகவும் ஆபத்தான தீவு என்று வர்ணிக்கப்படுகிறது. அதன் பெயரை இல்ஹா டா குயிமாடா கிராண்டே எனக் கூறுவதை விடப் பாம்புத் தீவு என்றால்தான் அதன் வீரியம் நமக்குப் புரியும்.

அடர்ந்த மரங்கள், கரடு முரடான பாறைகள் கொண்ட இந்த கொடிய தீவு 4000 விஷ பாம்புகளின் கூடாரமாக உள்ளது. தங்க நிறத்தில் ஈட்டி போன்ற தலையைக் கொண்ட இப்பாம்புகள் தங்க ஈட்டித் தலை பாம்புகள் என்ற பெயரைப் பெற்றன. அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவு,  11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்ததன் காரணமாகப் பிரேசிலில் நிலப்பரப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.

பாலூட்டிகள், வேட்டை விலங்குகள் இல்லாமல் பிரிந்த இந்த தீவு ஆயிரக்கணக்கான தங்க ஈட்டித் தலை பாம்புகளின் வசிப்பிடமாகவே மாறிவிட்டது, மரத்தில் சர்ரென ஏறும் இவ்வகை பாம்புகள், கொடிய விஷத்தின் மூலம் பறவைகளை இரையாக்கிப் பசியாறுகின்றன.

தங்க ஈட்டித் தலை பாம்புகள், சாதாரண விஷ பாம்புகளை விட 5 மடங்கு கொடிய விஷம் கொண்டவை. மரத்தின் உச்சிக்குச் சென்று காத்திருக்கும் இவ்வகை பாம்புகள் இளைப்பாற வரும் சிலியன் எலினேனியா என்ற பறவைகளை இரையாக்குகிறது. ஒரே கடியில் இந்தப் பாம்புகள் வெளிப்படுத்தும் விஷம், சிறுநீரகம் செயலிழப்பு, உடலுக்குள் ரத்தக்கசிவு, திசு நசிவை ஏற்படுத்திவிடும்.

இங்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு சதுர மீட்டாருக்கு ஒரு பாம்பு என்ற அளவில் இருக்கும் இந்த தீவில், பாம்பு கடித்தால் அவசரக் காலங்களில் மீட்பது கிட்டத்தட்டச் சாத்தியமற்றது என்பதால்.மனிதர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இத்தீவுக்குச் செல்ல வேண்டுமெனில் உரிய அனுமதி பெற்றுத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள், விஷ முறிவு மருந்துகள், மருத்துவ உதவியாளர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் உள்ளன.

எனினும், சட்டவிரோத வேட்டை கும்பல் மற்றும் இனப்பெருக்கமின்மை போன்ற காரணங்களால், தங்க ஈட்டித் தலை பாம்புகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. பாம்புத் தீவுக்கே பயத்தைக் காட்டியுள்ள சட்டவிரோத வேட்டை கும்பல் உண்மையில் பாம்பைக் காட்டிலும், கொடிய விஷம் கொண்டவர்கள்தான்.

Tags: today newsHomeland of poisonous snakes: The most terrifying island on Earthபூமியின் கொடிய தீவுவிஷ பாம்புகளின் தாயகம்
Share
Tweet
SendShare
Previous Post

வருவாய் துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்!

Next Post

NLC-யின் துணை நிறுவனம் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies