என்.எல்.சி அதன் துணை நிறுவனமான என்.ஐ.ஆர்.எல் நிறுவனத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுப்பிக்கக் கூடிய மின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக என்.எல்.சி நிறுவனம் என்.ஐ.ஆர்.எல் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறது.
இந்த நிறுவனத்தின் மூலம் புதுப்பிக்கக் கூடிய மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தியை அதிகரித்திடும் வகையில் என்.எல்.சி நிறுவனம் 7 ஆயிரம் கோடி ரூபாயை மேலும் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய முதலீடுகள் மூலம் 2030ம் ஆண்டுக்குள் 10 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி செய்வதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.