2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் இடம்பெற உள்ளது. இந்த ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
டி20 வடிவத்தில் நடைபெறும் போட்டிகள் ஜூலை 12-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்காக நடைபெறும் போட்டிகள் 2028-ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மகளிர் அணிக்கும், ஜூலை 29-ம் தேதி ஆடவர் அணிக்கும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.