இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏமனில் சிக்கியுள்ள செவிலியர் நிமிஷாவின் தூக்குத் தண்டனையை நிறுத்தும் விவகாரத்தில் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிவருவதாகக் கூறியுள்ளார்.
மக்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வது நாட்டின் முன்னுரிமை எனவும், இந்த விஷயத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருப்போம் எனவும் தெரிவித்தார்.
அதோடு கடந்த ஜனவரி 20-ம் தேதி முதல் ஜூலை 16 -ம் தேதி வரையிலும் சுமார் 1,563 இந்தியக் குடிமக்கள் அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.