விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானி எரிபொருளை துண்டித்தாக துணை விமானி கேள்வி எழுப்பினார் என அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விமான விபத்து புலனாய்வு பணிகத்தின் முதற்கட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் 2 என்ஜின்களுக்கான எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் ஒன்றன் பின் ஒன்றாகப் புறப்பட்ட ஒரு விநாடி இடைவெளியில் கட்ஆஃப் நிலைக்கு நகர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்படுவதற்கும் விபத்துக்கும் இடையிலான நேரம் வெறும் 32 வினாடிகள் மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்விட்சுகளை அணைத்தது தற்செயலானதா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதை முதற்கட்ட அறிக்கை கூறவில்லை என்று அமெரிக்க வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எரிபொருள் துண்டிப்புகளை விமானிகள் அணைத்ததாக விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையில் எந்தக் குறிப்பும் இல்லை என்று விமானிகள் கூட்டமைப்பு தலைவர் சிஎஸ் ரந்தாவா தெரிவித்துள்ளார்.
தரையிறங்கும் நேரத்தில், விமானி த்ரஸ்ட் ரிவர்சர்களைத் தேர்ந்தெடுத்தபோது, 2 என்ஜின்களும் மூடப்பட்டன, ஆனால் விமானி எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை நகர்த்தவில்லை என்று கூறியுள்ளார்.
எந்தவொரு தொலைக்காட்சியும், வர்ணனையாளர் அல்லது எந்தவொரு நிறுவனத்தின் தலைவரும் எந்த அடிப்படையும் இல்லாத கருத்தை வெளியிடக்கூடாது என்றும் கேப்டன் சிஎஸ் ரந்தாவா வலியுறுத்தி உள்ளார்.
முதற்கட்ட அறிக்கையோ அல்லது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரோ இது விமானியின் தவறு என்று கூறவில்லை என்று கேப்டன் சிஎஸ் ரந்தாவா தெரிவித்துள்ளார்.