அமெரிக்காவை குறிவைக்கும் இந்தியா : 12,000 கி.மீ பயணிக்கும் புதிய குண்டுவீச்சு விமானம்!
Jul 18, 2025, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்காவை குறிவைக்கும் இந்தியா : 12,000 கி.மீ பயணிக்கும் புதிய குண்டுவீச்சு விமானம்!

Web Desk by Web Desk
Jul 17, 2025, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கண்டம் விட்டு கண்டம் தாண்டி சுமார் 12,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய  ((Ultra Long-Range Strike Aircraft)) புதிய குண்டுவீச்சு விமானத்தை  இந்தியா உருவாக்கி வருகிறது.  இது, உலகளாவிய பெரும் ராணுவச் சக்தியாக இந்தியா முன்னேறுவதை எடுத்துக்காட்டுகிறது என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

நவீன காலத்தில் போர்க்களமும், அதற்கான போர் ஆயுதங்களும் மாறிவருகின்றன. குறிப்பாக வான்வழி போர், நீண்ட தூர வான்வழித் தாக்குதல்கள், சைபர் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிவேக ஏவுகணைகள்,  வான் பாதுகாப்பு அமைப்புக்கள் என மாறிவரும் போரின் தன்மைக்கு ஏற்ப  போர் ஆயுதங்களும் நவீனமாகி வருகின்றன.

அமெரிக்காவின்  B-2 Spirit stealth bomber மற்றும் B-21 Raider stealth bomber  போன்ற அதிநவீன குண்டுவீச்சு விமானங்களுக்கு இணையான விமானத்தை H -20 என்ற பெயரில்  தயாரிக்க நீண்ட காலமாகவே சீனா முயற்சி செய்து வருகிறது. அதே சமயத்தில், இந்தியா தனது அணுசக்தித் திறனை வான் படையிலும் சேர்க்கும் பணிகளைத் தீவிரப் படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ரஷ்ய விமானப்படையின் மிகவும் மேம்பட்ட குண்டுவீச்சு விமானங்களில் ஒன்றான Tu-160 ‘பிளாக்ஜாக்’  சூப்பர்சோனிக், குண்டுவீச்சு விமானம் போல அதிநவீன குண்டு வீச்சு விமானத்தை இந்தியா தயாரிக்க முடிவெடுத்துள்ளது. ரஷ்யாவின் Tu-160 ‘பிளாக்ஜாக்’  சூப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானம், வழக்கமான வெடி குண்டுகளையும் அதற்கும் மேல், அணு ஆயுதங்களையும்  ஏந்திச் சென்று வீசும் ஆற்றல் கொண்டதாகும்.

மணிக்கு 2,200 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இந்த விமானம், பறக்கும்போதே தன் இறக்கைகளை வெவ்வேறு கோணங்களில் மாற்றியமைக்கும் திறன் கொண்டதாகும். இது அதிக வேகத்திலும், குறைந்த வேகத்திலும் சிறப்பாகப் பறக்கும் இந்த விமானத்தில்  ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 12,300 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பாலும் பறக்க முடியும்.

எனவே, ரஷ்யாவின் Tu-160 ‘பிளாக்ஜாக்’  குண்டு வீச்சு விமானத்தின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வரம்பு ஆகியவற்றை  இந்தியாவின் புவிசார் அரசியல் நோக்கங்களுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றியமைப்பதாக DRDO அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின்  B-21 Raider stealth குண்டு வீச்சு விமானத்தை விட அதிக தூரம் பறக்கக் கூடிய விமானத்தை இந்தியா தயாரிக்கிறது. radar dodging, stealth தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி விமான அமைப்புகள் என பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்களுடன் இந்தியா உருவாக்கி வருகிறது.

இந்தியாவின் புதிய கண்டம் விட்டு கண்டம் தாவி அழிக்கும்  Ultra Long-Range Strike Aircraft  குண்டுவீச்சு விமானம் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், சுமார் 12,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் குண்டு வீச்சு விமானம், சுமார் நான்கு பிரம்மோஸ்-NG க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட 450 கிலோமீட்டர் எல்லைவரை சென்று தாக்கக் கூடிய சூப்பர்சோனிக் ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.

அக்னி-1P, லேசர் குண்டுகள் மற்றும் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஆயுதங்களும் இறுதி பேலோடின் ஒரு பகுதியாக இந்த குண்டு வீச்சு விமானத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி,  எதிரி நாட்டு விமான தளங்கள், ரேடார் வான் பாதுகாப்பு அமைப்புக்கள்,, கட்டளை மையங்கள் மற்றும் அணுசக்தி தளங்களைத் துல்லியமாகவும்  விரைவாகவும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.

9,300 கிலோமீட்டருக்கு மேல் பயணித்தாலே  அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும்  ஆஸ்திரேலியாவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக அழிக்க முடியும். ஒருபடி மேலே சென்று, ஒரு முறை எரிபொருள் நிரப்பினாலே  12,000கிலோமீட்டருக்கு மேல் சென்றுதாக்கும் வல்லமையுடன் இந்தியா இந்த புதிய குண்டு வீச்சு விமானத்தைத் தயாரிக்கிறது.

DRDO, HAL மற்றும் ADA ஆகியவற்றுடன் இணைந்து மத்திய அரசு இந்த வெற்றிகரமான பணியைத் தொடங்கியுள்ளது.  ரஷ்யா மற்றும் பிரான்சுடன் தொழில்நுட்பம்  பரிமாற்ற ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக, GE-414 அல்லது ரஷ்யாவின் NK-32 எஞ்சின்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.  இந்தியாவின் இந்த பாய்ச்சல், பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.

Tags: புதிய குண்டுவீச்சு விமானம்கண்டம் விட்டு கண்டம்Ultra Long-Range Strike Aircraft)இந்தியாIndia targets America: New bomber with a range of 12 thousands km!அமெரிக்காவை குறிவைக்கும் இந்தியா
ShareTweetSendShare
Previous Post

சர்ச்சை பேச்சின் பின்னணி – காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?

Next Post

வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!

Related News

வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!

சர்ச்சை பேச்சின் பின்னணி – காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

அமெரிக்காவிடம் இந்தியா உறுதி : அசைவ பால் இறக்குமதி அனுமதிக்கு வாய்ப்பே இல்லை!

“சீனாவை பார்த்து படிக்க வேண்டிய நேரம் இது” – ஸ்ரீதர் வேம்பு அதிரடி X பதிவு!

திக்குமுக்காடும் அமெரிக்கா : திரும்பும் திசையெல்லாம் பெருக்கெடுத்த வெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை குறிவைக்கும் இந்தியா : 12,000 கி.மீ பயணிக்கும் புதிய குண்டுவீச்சு விமானம்!

மானமுள்ள காங்கிரஸ்காரன் திமுக கூட்டணியில் இருக்க மாட்டான் : அண்ணாமலை

யூடியூபர்களை அனுமதிக்காதீங்க : பரபரப்பை பற்ற வைத்த நடிகர் விஷால்!

காப்பாற்றப்படுவாரா நிமிஷா? : இரத்தப் பணத்தை ஏற்க மறுக்கும் உறவினர்கள்!

காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம் : நயினார் நாகேந்திரன்

சங்கரன்கோவில் நகராட்சியில் காலதாமதமாக மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால் வாக்குவாதம்!

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் விளக்கம்!

அகமதாபாத் விமான விபத்து – வால் ஸ்ட்ரீட் ஜானல் அறிக்கை!

பாகிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு : 120-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!

சேலம்: வஉசி பூ மார்க்கெட் வியாபாரிகள் சாலையில் பூக்களை கொட்டி போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies