பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என, திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இன்னும் சில மாதங்களில் ஆட்சி காலமே நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த பகுதிநேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் முன்பு 10ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.