கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் உரிமைக்காக போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர்களை சந்திக்க நயினார் நாகேந்திரன் சென்றார். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை கேட்பதாகவும், அது அவர்களின் உரிமை என்றும் கூறினார். உரிமைக்காக போராடியவர்களே கைது செய்து இருக்கின்றனர் என்றும், அவர்களைப் பார்க்க வந்த தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். NDA கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் இதற்கெல்லாம் முடிவு கட்டுவோம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.