பீகார் மாநிலம், பாட்னாவில் 5 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து, பரோலில் வெளியே வந்தவரை சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரச் செய்துள்ளன.
பீகாரை சேர்ந்த சந்தன்மிஸ்ரா என்பவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சந்தன் மிஸ்ரா, பாட்னாவின் பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனை அறிந்து மருத்துவமனைக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், சந்தன் மிஸ்ராவை சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலை சந்தன் மிஸ்ராவின் போட்டி கும்பல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.