கேரளாவில் விவாகரத்து பெற்ற பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள DIVORCE CAMP பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரபியா அஃபி என்பவர் இந்த Divorcee Camp-ஐ தொடங்கியுள்ளார். விவாகரத்து பெற்ற பெண்களின் மனஉளைச்சலை போக்கவும், அடுத்த கட்ட பயணம் குறித்து சிந்திக்க ஏதுவாகவும் இந்த கேம்பை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண்கள் இந்த கேம்பில் இணைந்தனர். அவர்கள் அனைவரையும் ரபியா அஃபி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்றார்.
இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. கேரளாவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக துபாயில் DIVORCE CAMP நடத்தவுள்ளதாக ரபியா அஃபி தெரிவித்துள்ளார்.