கன்னியாகுமரி மாவட்டம் களியல் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர், தான் பயின்ற பள்ளியிலேயே தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பத்துகாணி பகுதியில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. 12ஆம் வகுப்பு வரை இந்த பள்ளியில் பயின்ற ஷீலா என்பவர், ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வட்டப்பாறையில் உள்ள தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், தான் பயின்ற அதே பள்ளியில் அவர் தலைமை ஆசிரியராக தற்போது பொறுப்பேற்றுள்ளார்.