பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியே கற்பனையானது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
அதிமுகவின் தேர்தல் உத்திகளையும் தந்திரங்களையும் வெளியே சொல்ல முடியாது எனக் கூறியுள்ள அவர், திமுகவை வீழ்த்த ஒத்தகருத்துடைய அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவோரை, வரவேற்பதில் எந்த தவறும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.