மடப்புரம் அஜித்குமார் லாக்கப் மரண வழக்கின் சாட்சிகள் 5 பேர், விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரண வழக்கு தொடர்பாக, விசாரணை அதிகாரி டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையில், சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வழக்கு விசாரணைக்காக அறநிலையத்துறை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர், அஜித்குமாரின் சகோதரர் என 5 பேர், சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆகுமாறு நேற்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் வழக்கின் சாட்சிகளான ஐந்து பேரும் மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.