மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 7ஆம் தேதி முதல், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கினார். கோவையில் தனது பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறையில் தனது பரப்புரையை மேற்கொண்டார்.
முன்னதாக அங்கு தங்கி இருந்த அவர், சீர்காழியில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது மகன் மிதுனுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.