நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் 3 சிறுத்தைகள் ஒரே நேரத்தில் உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோத்தகிரியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நுழைவது தொடர் கதையாகவுள்ளது.
இந்நிலையில் அரவேணு மற்றும் பெரியா நகர் போன்ற இடங்களில் 3 சிறுத்தைகள் ஒன்றாகச் சாலையில் சுற்றித் திரிந்தன.
நல்வாய்ப்பாக அப்போது யாரும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியானதால் அச்சமடைந்துள்ள மக்கள், சிறுத்தைகளைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடக் கோரிக்கை விடுத்துள்ளனர்.