பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் 180 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பதைத் தணிக்கை துறை அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது.
இந்த போட்டியில் சர்வதேச அணிகளுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தனியார் ஊழியர்களின் உணவுக்காக மட்டும் ஏறக்குறைய 2 கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கூறியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்த சூழலில், 2023-24-ம் ஆண்டு நிதியாண்டில் 180 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.