திருச்சியில் திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்தனர்.