மாம்பழம் விற்பது போலக் கூவி கூவி ஓரணியில் தமிழ்நாடு என ஆட்களை திமுக சேர்த்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இத்தொடர்பாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேசியவர்,
கர்ம வீரர் காமராஜர் குறித்து பல்வேறு விதமாக அவதூறு பேசியவர்கள் திமுகவினர் என்றும் மக்கள் கோபமடைந்த உடன் திமுகவினர் பேசியதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என விசிக கூறுகிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
திமுகவினர் அவதூறாகப் பேசியது குறித்து காங்கிரஸ் எதுவும் பேசவில்லை என்றும் காங்கிரஸ் செயலிழந்துவிட்டது என்று அண்ணாமலை கூறினார்.
வலுக்கட்டாயமாக மக்களைக் கட்சியில் சேர்த்து வருகின்றனர் திமுகவினர் என்றும் கூவி கூவி மாம்பழம் விற்பது போல கூவி கூவி ஆட்களைச் சேர்த்து வருகின்றனர் திமுகவினர் என்று அண்ணாமலை தெரிவித்தார்.