மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மூத்த மகன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநில நயினார் நாகேந்திரன் இரங்கல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்தமு.கருணாநிதி அவர்களின் மூத்த புதல்வரும், தமிழக முதல்வர் ஸ்டாலினின்
மூத்த சகோதரருமான மு.க. முத்து , வயது மூப்பு காரணமாக இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
முத்து அவர்களது பிரிவால் வாடுகின்ற அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களின் மூத்த மகனும், மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலினின் மூத்த சகோதரருமான மு.க. முத்து அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. மு.க. முத்து அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.