ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் - தலைவர்கள் புகழாஞ்சலி!
Oct 5, 2026, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – தலைவர்கள் புகழாஞ்சலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 19, 2025, 12:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், சிறந்த பேச்சாளருமான தியாக சுடர் ஆடிட்டர் ரமேஷ் ஜி அவர்களின் நினைவு தினம் இன்று.

தமிழகத்தில் நமது கட்சியின் வளர்ச்சிக்காகவும், தேச நலனுக்காகவும் சமூகப் பணிகள் மேற்கொண்டு வந்த ஆடிட்டர் ரமேஷ் ஜி அவர்கள், இஸ்லாமியப் பயங்கரவாதிகள் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இன்று நமது கட்சி அடைந்துள்ள வளர்ச்சி என்பது, ஆடிட்டர் ரமேஷ் ஜி போன்றோரின் உயிர் தியாகங்களால் நிகழ்ந்தவையாகும்.

ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் நினைவு தினத்தில், அவரது தியாகத்தையும் சமூகப் பணிகளையும் நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாலை விடுத்துள்ள பதிவில், தேசியச் சிந்தனை மிக்கவராகவும், மிகச் சிறந்த பேச்சாளருமாகத் திகழ்ந்த தமிழக பாஜக
முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் அமரர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று காலை பாஜக நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வணங்கினோம்.

நாட்டின் வளர்ச்சிக்கும், கட்சி வளர்ச்சிக்கும் கடினமாக உழைத்தவர். அவரது கொள்கை உறுதிப்பாடும், மக்களை ஈர்க்கும் பேச்சுத் திறனும், தேசநலன் சார்ந்த சிந்தனைகளும், தேச விரோத பயங்கரவாதிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியதில் வியப்பில்லை. தேசத்திற்காகத் தனது உயிரையே தியாகம் செய்த அமரர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் விடுத்துள்ள பதிவில், நமது தமிழக -வின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளரும், சிறந்த பேச்சாளரும், தலைசிறந்த தேசியவாதியுமான அமரர் ஆடிட்டர் ரமேஷ்  இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மதவெறிக்கு பலியான நாள் இன்று.

அவரது நினைவு தினத்தில் அவரது ஈடு இணையற்ற தியாகத்தைப் போற்றி வணங்குவோம். அவரது வழியில் தேசத்தையும், தெய்வீகத்தையும் முன்னிறுத்தி நம் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்போம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: annamalaiminister l muruganauditor ramesh death anniversaryTamil Nadu BJP state president Nainar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

கருணாநிதி மூத்த மகன் மு.க. முத்து மறைவு – எல்.முருகன், நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Next Post

உயிருக்கு அச்சுறுத்தல் – டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு பேட்டி!

Related News

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மருத்துவர்களின் சேவை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும் – எல்.முருகன்

தேசத்திற்கு சிறந்த தலைவராக கிடைத்த பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies