ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், சிறந்த பேச்சாளருமான தியாக சுடர் ஆடிட்டர் ரமேஷ் ஜி அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழகத்தில் நமது கட்சியின் வளர்ச்சிக்காகவும், தேச நலனுக்காகவும் சமூகப் பணிகள் மேற்கொண்டு வந்த ஆடிட்டர் ரமேஷ் ஜி அவர்கள், இஸ்லாமியப் பயங்கரவாதிகள் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இன்று நமது கட்சி அடைந்துள்ள வளர்ச்சி என்பது, ஆடிட்டர் ரமேஷ் ஜி போன்றோரின் உயிர் தியாகங்களால் நிகழ்ந்தவையாகும்.
ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் நினைவு தினத்தில், அவரது தியாகத்தையும் சமூகப் பணிகளையும் நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாலை விடுத்துள்ள பதிவில், தேசியச் சிந்தனை மிக்கவராகவும், மிகச் சிறந்த பேச்சாளருமாகத் திகழ்ந்த தமிழக பாஜக
முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் அமரர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று காலை பாஜக நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வணங்கினோம்.
நாட்டின் வளர்ச்சிக்கும், கட்சி வளர்ச்சிக்கும் கடினமாக உழைத்தவர். அவரது கொள்கை உறுதிப்பாடும், மக்களை ஈர்க்கும் பேச்சுத் திறனும், தேசநலன் சார்ந்த சிந்தனைகளும், தேச விரோத பயங்கரவாதிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியதில் வியப்பில்லை. தேசத்திற்காகத் தனது உயிரையே தியாகம் செய்த அமரர் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் விடுத்துள்ள பதிவில், நமது தமிழக -வின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளரும், சிறந்த பேச்சாளரும், தலைசிறந்த தேசியவாதியுமான அமரர் ஆடிட்டர் ரமேஷ் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மதவெறிக்கு பலியான நாள் இன்று.
அவரது நினைவு தினத்தில் அவரது ஈடு இணையற்ற தியாகத்தைப் போற்றி வணங்குவோம். அவரது வழியில் தேசத்தையும், தெய்வீகத்தையும் முன்னிறுத்தி நம் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்போம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.