போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? - அண்ணாமலை கேள்வி!
Jul 19, 2025, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Jul 19, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியப் பெருமக்களுக்கு திமுக அரசின் பதில் என்ன?  என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த நான்கு ஆண்டுகளாகப் பொதுமக்களை வஞ்சிப்பதையே தொழிலாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், பள்ளிக் கல்வித்துறையில் இசை, ஓவியம், தையல், உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில், பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்த 12,000க்கும் அதிகமான ஆசிரியர்களை, ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று, தனது தேர்தல் வாக்குறுதி எண் 181ல் கூறிய திமுக, கடந்த நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது என கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறை ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கும்போதும், பொய்யான நம்பிக்கை கொடுத்து ஏமாற்றி வருகிறது திமுக அரசு. ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையால், ஒவ்வொரு முறையும் ஆசிரியப் பெருமக்கள், தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பும்போதும், அவர்கள் கோரிக்கையை அத்தோடு மறந்து, விளம்பர ஷூட்டிங்கில் நடிக்கச் சென்று விடுகிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தொடங்கி, ஒட்டு மொத்த திமுக அமைச்சர்களும், சிலை வைப்பது, பெயர் வைப்பது என, ஊடகங்களில் ஒரு நாள் தலைப்புச் செய்திக்காக அலைந்து கொண்டிருக்கிறார்களே தவிர, உண்மையான மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, அற வழியில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிக் கொண்டிருக்கும் பகுதி நேர ஆசிரியப் பெருமக்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? வாக்களித்த மக்களை வஞ்சிப்பது திமுகவுக்குப் புதிதல்ல என்றாலும், நாட்டின் எதிர்காலமான மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை, இப்படி தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் அவல நிலையில் வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

உடனடியாக, பகுதி நேர ஆசிரியப் பெருமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று, திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: part-time teachers protestdks false promisesannamalaiDMK government
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பிரதமர் மோடி இரு நாட்கள் சுற்றுப்பயணம் – முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்!

Next Post

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் – முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமைக்காவலர் கைது!

மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இபிஎஸ் உறுதி!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

அரசு கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈ.வெ.ரா. பெயரில் கட்டப்பட்டு வரும் நூலக நுழைவு வாயிலில் திருஷ்டி படம்!

கும்மிடிப்பூண்டி அருகே 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – உருவ படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை!

மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் – முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் பிரதமர் மோடி இரு நாட்கள் சுற்றுப்பயணம் – முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்!

டி20 கிரிக்கெட்டில் 13000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் சாதனை!

எஸ்சி சான்றிதழ் முறைகேடு – தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies