கோவை மாவட்டம் சிறுமுகை அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, இரு கிராம மக்கள் பயன்பாட்டிற்காக இயந்திர படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம், காந்த வயல் கிராமங்களை இணைக்கும் உயர்மட்ட பாலம், பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கியது. இதனால் 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்டு வந்தனர்.
அத்துடன் பள்ளி மாணவர்கள் ஆற்றைக் கடக்க ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இதனை சுட்டிக்காட்டி அங்கு இயந்திர படகு இயக்க தமிழக அரசுக்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தினார். இந்த நிலையில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக உதகையில் இருந்து லிங்காபுரத்துக்கு இயந்திர படகு கொண்டு வரப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
காந்த வயல் – லிங்காபுரம் இடையே பயணிக்க இயந்திர படகு சேவையை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.