மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் செருதூரில் மீனவர்களுடன் அவர் கலந்துரையாடிய அவர், கடலோர மீனவ கிராமங்களில் தடுப்பு சுவர், சிறு துறைமுகங்கள், மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்றார்.
மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்ற மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
அதிமுக ஆட்சியில் கஜா புயலால் பாதித்த மீனவர்களுக்கு ரூ.1.50 லட்சம் மானியத்தில் பைபர் படகுகள் வழங்கப்பட்டதாகவும் இபிஎஸ் தெரிவித்தார்.