கோவை காந்திபுரத்தில் ஈ.வெ.ரா. பெயரில், தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் நுழைவு வாயிலில் பெரிய கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டிருப்பது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
கோவை காந்திபுரத்தில் தமிழக அரசு சார்பில் ஈ.வெ.ரா. பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கட்டடத்தின் நுழைவு வாயிலில் மிகப்பெரிய அளவிலான கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டுள்ளது.
மூட நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த ஈ.வெ.ராவின் நூலகத்திற்கு வெளியே கண் திருஷ்டி புகைப்படம் வைக்கப்பட்டிருப்பது கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
கண் திருஷ்டி படத்தை வைப்பது மூட நம்பிக்கை இல்லையா? என பலரும் விமர்சித்து வருகின்றனர்.