திருவள்ளுரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை கண்காணிக்கக்கோரி தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், சிறுமி வன்கொடுமை விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கண்காணிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளார்.